மனைவி வசந்தா
மனைவி வசந்தாவின் உடல்நிலை!
நாள்:13.05.25
PHYSIO
மனைவி வலியால் முகஞ்சுழிக்கும் போது
மனது பிசைகிறது! கைகள் துடிக்க
உடல்பயிற்சி நேரம் மனம்நோகப் பார்க்கும்
கடமையில் வாழ்கிறேன் நான்.
அந்த அழகான புன்னகையை மீண்டும்நான்
என்றுகாண்பேன்? எப்படிக் காண்பேனோ? என்னசொல்ல?
பண்பட்ட பேச்செங்கே? பாடும் குரலெங்கே?
கண்ணெதிரே வாடுகின்றா ளே!
நடந்து வருவாளா? கேலிசெய்து பார்த்துக்
கடந்தேதான் போவாளா? அய்யோ! கவலைப்
படுவதுதான் வாழ்வா? பகர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home