Sunday, February 15, 2026

உடலும் கவிஞனும்

 உடலும் கவிஞனும்!

உடலின் உறுப்புகள் இங்கே வலிக்க

உடைப்பெடுக்கும் எந்தன் கவிதையை நானோ

கடமையாய் நாளும் எழுதி மகிழ்வேன்!

கடமை முடிந்ததும் சாய்ந்து படுப்பேன்!

உடல்வலி சற்றே குறைந்ததும் மீண்டும்

நடப்பேன் எழுந்துதான் நான்.

மதுரை பாபாராஜ்

ChatGPT

The Body and the Poet!

When limbs of flesh cry out in pain,

And every nerve protests within,

Still I — bound to my verse —

Break open words and write in joy.

Duty done, I lean and lie,

Letting the ache have its hour.

But when the body’s torment fades a little,

I rise again —

And walk my path once more.

இதை இப்படியும் மாற்றி சொல்லலாம்.... 


*உடல் வலியினூடே கற்பனை பழத்தை பிழிந்து தமிழைச் சாராக கவிதை கிண்ணத்தில் ஊற்றி கொடுக்கும் உங்கள்  எழுதுகோல் இயந்திரம் பழுதில்லாமல் சிந்தனையால் உழுது மேலும் பல அமிழ்து பொழியட்டும்..*

ஆகச் சிறந்த தமிழ் மொழி... பேசுவதில்... சுவாசிப்பதில் ... பெருமை கொள்கிறோம்👍👍👍

Col Krishnamoorthy

தொடருங்கள்,கவிஞரே,

தொய்வில்லா மனதிற்கும்,

சோர்வில்லா உடல்

நலத்திற்கும்.

Dr Sethu

0 Comments:

Post a Comment

<< Home