Tuesday, March 24, 2026

கடவுள் வாழ்த்து குழ்ந்தைப்பாடல்

 அறத்துப்பால்

--------------------------------

திருக்குறள்

------------------------------

கடவுள் வாழ்த்து 1

-----------------------------------------------

தமிழின் தொடக்கம் அகரம்

உலகின் தொடக்கம் இயற்கை

-------------------------------------------------------

எழுத்தின் தொடக்கம் அகரந்தான்!

உலகின் தொடக்கம் இறைவன்தான்!


இறைவனை முறையாய் வணங்கிடுவோம்

இல்லையேல் கற்றது வீணாகும்!


நினைக்க நினைக்க நிம்மதிதான்!

நீண்ட காலம் வாழ்ந்திடலாம்!


துன்பம் நம்மை நெருங்காது

தீவினை நம்மைச் சேராது!


ஆசை தன்னை அடக்கித்தான்

ஒழுக்கத் தோடு வாழ்ந்திடலாம்!


அவனடி பணிந்தால் போதுமே

கவலைகள் எல்லாம் நீங்குமே!


மறந்து போன மற்றவர்க்கோ

கவலைகள் நிலையாய் மாறிடுமே!


ஆசைக் கடலைக் கடப்பதற்கோ

அன்புத் தோணி இறைவன்தான்!


இறைவனைப் பணியாத் தலைகளோ

இயங்காப் புலன்போல் பயனில்லை!


சரணம் அடைந்தால் திளைக்கலாம்!

பிறவிக் கடலை நீந்தலாம்!



0 Comments:

Post a Comment

<< Home