Wednesday, August 05, 2020

இன்பத்துப்பால் குழந்தைகளுக்காக 1081-1083

இன்பத்துப்பால் குழந்தைகளுக்காக

 அதிகாரங்கள் 109 மூன்று குறள்கள்

109.தகையணங்குறுத்தல்
        LOVER' S PRIDE OF LOVE' S BEAUTY
      
அழகின் வெளிப்பாடு

தாயும்சேயும் -- MOTHER AND CHILD

1081 
அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
மாதர்கொல்? மாலுமென் நெஞ்சு.

குழந்தையே!
நீ  அழகின் அழகியோ?
மனங்கவர் மயிலோ? காதணிகள்அணிந்தநீ
அமுதச்சிறுமியோ? என்றெல்லாம்
மயங்குதடி எந்தன் நெஞ்சம்.

குறள் 1082

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக் கொண்டன்ன துடைத்து.

கண்ணே!
கண்மணியே!
அம்மாவை வைத்தகண்
வாங்காமல்
அப்படிஎன்ன பார்க்கிறாய்?
மறுபடிமறுபடியுமா
பார்ப்பது!

பார்வைக்குப் பார்வை!
எதிர்ப்பார்வையா?
நீமட்டும் வராம
கூட ஒருபடையையே
கூட்டிவந்து
தாக்குறியே!
சரிதானாசெல்லமே!
--------------------------------------------------------------
தாயின்வலி
குறள் 1083

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

மகளே!
வேதனையென்றால்
என்னவென்று நானறியேன்!
இந்தப் பெண் வடிவத்தில்
உன்னைக் 
காண்பதற்கு
மகப்பேறுவலி்
துன்பந்தான்!
இருந்தாலும்
இன்பந்தான்
என்றுணர்ந்தேன்!
அழகானஉன்கண்கள்
உள்ளத்தைக்
கொள்ளைகொள்கிறது

தொடரும்

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home