சோர்விலாள் பெண்
சோர்விலாள் பெண்!
கவலையின்றி வாழ்வதற்குக் கைகொடுக்கும் பெண்கள்!
சமையலையும் மேல்வேலை பார்ப்பதையும் பெண்கள்
சுமையென்றே எண்ணாமல் நேரத்தில் வந்தே
அனைத்தையும் செய்து முடிக்கின்றார்!
வீட்டில்
மனம்மகிழ பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல
வகைசெய்யும் கோலம் அழகு.
பெற்றோர்க்கோ இங்கே உதவிகள் செய்கின்றார்!
உற்ற துணையாக மாறி கவலைகள்
சற்றுமின்றி பெற்றோர் பணியகம்
செல்வதற்கு
சத்தமின்றி ஊக்கமானார் சொல்.
பெற்றோர் வருமுன்னே பள்ளிசென்ற பிள்ளைகள்
எப்படியோ வந்துவிடும் காட்சிகள்! பிள்ளைகளை
சற்றும் கவலையின்றி பார்க்கும் பணிகளில்
பற்றுடன் வந்தே உதவுகின்றார் பெண்கள்தான்!
பிள்ளைகள் ஆயா விடந்தான் வளர்கின்றார்!
பெற்றோர் வருமட்டும் ஆயா பொறுப்புதான்!
இப்படி மாறியதே வாழ்வு?
தன்வீட்டை மற்றவர் வீட்டையும் பார்க்கின்ற
பெண்களுக்கு ஓய்வேது? என்னதான் காசுபணம்
வந்தாலும் நேரத்தில் சென்றே உதவுதல்
பண்பிற்கோ ஈடில்லை சொல்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home