மதுரை பாபாராஜ்
பன்முகக் கலைஞர்
பண்புக் கவிஞர்
இன்முகச் சொல்லர்
இனிதான பண்பர்
குறளே மூச்சாய்
குணமே காவலாய்
அறமே வாழ்க்கையாய்
அறிவே துணையாய்
என்றென்றும் எங்கள்
உள்ளத்தில் வாழும்
அன்பின் மனிதர்
பாபாராஜ் வாழ்க
இன்று பிறந்தநாள் காணும்
நண்பர் பாபாராஜ் வளமுடனும்
நலமுடனும் வாழ்க வாழ்கயென
வாழ்த்தும்
கா செல்வராசு
💐💐💐💐💐💐💐💐💐
[11/10, 13:34] Vovemayavaramban: *கவிஞர் பாபாராஜ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து!*
அகவை எழுபத்துஎட்டில்
அடியெடுத்து வைத்தாலும்
அகத்தில் அன்பு
ஆறாய்ப் பெருகும்!
அகமும் புறமும்
இளமை ததும்பும்!
அன்பின் வழியே
அறவழி நடக்கும்
அன்பிற் கினிய
வெண்பா கவியிவர்!
இன்னலும் இன்பமும்
இயல்பென இயம்பி
இடுக்கணை விரட்டும்
இளைஞர் பாபா
தாயாம் தாரத்தை
தாயு மானவனாய்
தாங்கிப் பிடித்து
தூணாய் இருக்கும்
மாண்புறு இணையரே
மதுரகவி பாபாவாம்!
குன்றா நலமும்
குன்றென வளமும்
குறைவிலாப் பெற்று
நிறைவாழ்க்கை வாழ
சீரிளமைத் தமிழாய்
சீர்மையுடன் நடைபோட
செந்தமிழின் இனிமையுடன்
செருக்குடனே வாழ்ந்திடவே
நெஞ்சினிக்க வாழ்த்துகிறேன்!
நெஞ்சார வாழ்த்துகிறேன்!
வாழிய வாழியவே!
வாழிய பல்லாண்டு!
வாழ்த்தும்
கோ.இமயவரம்பன்
11.10.2025
[11/10, 13:40] Madurai Babaraj: நண்பர் இமயத்திற்கு நன்றிப்பா!
அருமை அருமை இமையக் கவிதை!
கரும்பும் கசக்கும் கவிதை சுவைத்தால்!
உருகவைக்கும் அன்பே இவரன்பாம் இங்கே!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாபாராஜ் ஐயா. தமிழ்த்தாயின் அருட்பார்வை முழுமையாக த் தங்களுக்கு உள்ளது. கற்றது தாவரவியல். வாழ்வதற்கு கணக்கியல் என்றாலும் தமிழன்னை தங்களை தன்பால் ஈர்க்கின்றாள்.தங்கள் தமிழ்த்தொண்டு நீடூழி நெடுங்காலம் தொடர வாழ்த்துகள்.
இராமசாமி BSNL
பாபாவிற் கோவாழ்த்து நம்மன
திற்கது
நோபல் கிடைத்த மகிழ்வு.
தென்.கி
Vovkaniankrishnan:
கவிஞர்கள் இளமையினும் புதுமையினும் கவினுடனே இருப்பர்.
தமிழ்=அழகு=பாபா
VOV C.ANBU:
Photo from C.Anbu
Vovmeignaniprabakarababu:
கவிஞரின் மிடுக்கான படம் கவர்கிறது. வாழ்க பல்லாண்டு நலமோடு ....👍👍👌👌❤️
கவிஞர்கள் இளமையினும் புதுமையினும் கவினுடனே இருப்பர்.
தமிழ்=அழகு=பாபா
VOV C.ANBU:
Photo from C.Anbu
Vovmeignaniprabakarababu:
கவிஞரின் மிடுக்கான படம் கவர்கிறது. வாழ்க பல்லாண்டு நலமோடு ....👍👍👌👌❤️
கவிஞர் திரு பாபாராஜ் ஐயாவிற்கு எங்கள் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 🙏🏿🌹🤝🌹🌹👏👏👏📚✍️🙏🏿🙏🏿 குடும்ப உறவுகளோடும் நட்புகளோடும் பூரண நலமுடன் பல்லாண்டு வாழ்க வணங்கி மகிழ்கிறோம் ஐயா. 🤝💐💐
மொகலீஸ்வரன்


பிறந்தநாள் வாழ்த்துக்கள் நைனா. 🎂💐
வாழ்த்த வயதின்றி வணங்குறேன் 🙏🏻🙏🏻
ஆர்த்தி கோவிந்
கவிதைக்குப் பிறந்த நாள்.
மரபின் மாண்புக்குப்
பிறந்த நாள்.
வாழ்க பல்லாண்டு..
என்றும் அன்புடன்
கவிதைக் கரையில்
சிறு செடி..முருகு
🌿🌿🌸🌿🌿
இளமை காலத்து முதல் இன்றும் நட்பு தொடரும் நண்பர் பாபாராஜ் வாழ்க பல்லாண்டு.
என்றும் அன்புடன்
தம்பா
அன்பு பாபா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙏
Fenner Ramani
Vovkaniankrishnan:
நோய் நொடியின்ற நீண்ட நாள் இம்மண்ணில் மகத்தாக வாழ என்யினிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா..தென்.கி.
மேலும் பல கவிதை நூல்களைப் படைத்து இம்மண்ணில் தவழவிட்டு தமிழன்னைக்குப் பாவாரம் சூட்டி - பாபா அவர்களே! நீங்கள் பாங்காய் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்.
தென்.கி.
நோய் நொடியின்ற நீண்ட நாள் இம்மண்ணில் மகத்தாக வாழ என்யினிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா..தென்.கி.
மேலும் பல கவிதை நூல்களைப் படைத்து இம்மண்ணில் தவழவிட்டு தமிழன்னைக்குப் பாவாரம் சூட்டி - பாபா அவர்களே! நீங்கள் பாங்காய் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்.
தென்.கி.
பிறந்தநாள் வாழ்த்துகள்💐
அய்யா
குமரேசன.பா
Happy birthday and long live 💐👏
Mythu appa
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் dear பாபா...இன்று போல் என்றும் நலமுடன் வாழ்க...🎊🎈🎉🎁🎂💐🙏
Balakrishnan kovai
இனிய நண்பர் மதுரை பாபாராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மரபுக்கவிஞரே.மதுரையின் பெருமையே.வாழ்க.வாழ்க. கவிஞர் இரா.இரவி.
[11/10, 10:25] Saravananddl: வெண்மை உள்ளம் படைத்த வெண்பா கவிக்கு அகவைத்திருநாள் வாழ்த்துக்கள்!
எம் அகத்தின் அனைத்து நிகழ்வுகளும் மாமாவின் வாழ்த்துக் கவி இன்றி நிறைவுறாது.
தமிழோ, ஆங்கிலமோ, வார்த்தைகளை அழகுற கோர்த்து கவி வடிக்கும் பாங்கு.
கடந்து வரும் பாதைகளை வார்த்தை ஜாலங்களால் நிகழ்வுப் பதிவாக்கும் திறமை. தான் கண்டதை
சித்திரமாக வரைவது ஓவியர். சிலையாக வடிப்பவர் சிற்பி.. கவி மாலையாகத் தொடுப்பவர் கவிஞர்.
என் நூறாவது அகவையிலும் எம் அம்மானின் வாழ்த்துப் பாவை எதிர்நோக்கி - நீடு வாழ இந்த நன்னாளில் தங்களின் ஆசிகளை வேண்டி... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - தந்தையுமானவருக்கு ..🙏🎂🍬💐
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாபாராஜ் ஐயா. தமிழ்த்தாயின் அருட்பார்வை முழுமையாக த் தங்களுக்கு உள்ளது. கற்றது தாவரவியல். வாழ்வதற்கு கணக்கியல் என்றாலும் தமிழன்னை தங்களை தன்பால் ஈர்க்கின்றாள்.தங்கள் தமிழ்த்தொண்டு நீடூழி நெடுங்காலம் தொடர வாழ்த்துகள்.
இராமசாமி BSNL
மருமகன்.மு.சரவணன் திண்டுக்கல்
அருமை அருமை
ஆசையும் அருமை
பெருமை அணிவித்த
பைந்தமிழ்க்
கவிஞருக்கு நன்றி
மதுரை பாபாராஜ்
பிறந்த நாள் வாழ்த்துகள். ஐயா.
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால் திருவருளால், எல்லா நலன்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!!!☘🌺
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால் திருவருளால், எல்லா நலன்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!!!☘🌺
🌹☘🌹
Vov இராமாநுசம்
முரண்கள் அல்ல.
பல்திறன்கள்.
அரணாக அகம் காக்கும் அரசருக்கு(அரசரடியார்க்கு)
அகம் நிறை ,
அகவை நன்னாள்
வாழ்த்துகள்.
Madurai Babaraj:
ஆங்கிலம் படித்த மருத்துவரா?
அருந்தமிழ் வித்தகரா சேது?
மிக நன்றி.
💐💐Happy birthday Babaji Anna
Wish you many more happy returns of the day
God bless🙏🙏
Periakanna





0 Comments:
Post a Comment
<< Home