Saturday, December 13, 2025

பேரன் சுசாந்த் ஸ்ரீராம்


 பேரன் சுசாந்த் ஸ்ரீராமுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத் திருநாள்: 15.12.25


அகவை 23/24


இருபத்து மூன்றை நிறைவுசெய்து இன்று

இருபத்து நான்கை வரவேற்கும் பொன்னாள்!

பெருமையுடன் பெற்றோரும் உற்றாரும் வாழ்த்த

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ

சிறப்புடன் வாழ்க! நலமுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home