Saturday, February 21, 2026

கோவிந்தும் ராஜாவும்


 அக்கா மகன் ராஜாவுடன்

தங்கை மகன் கோவிந்தன்!


குப்பாயம் தன்னைத்தான் கம்பீர மாயணிந்து

தன்னுடைய கையிரண்டை கால்சட்டைப் பைக்குள்ளே

என்னமாய் விட்டேதான் நின்று வரவேற்பில்

அக்கா மகனான ராஜா உடனிங்கே

தங்கை மகனான கோவிந்தன் ஆகாகா

புன்னகை பூக்கத்தான் பேசி மகிழ்கின்றார்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home