Tuesday, May 12, 2020

கொரோனாவால் சமத்துவ மாற்றம்!

கொரோனாவின் தாக்கம் இல்லாத நேரம்
தரமான ஆடை விளைபொருட்கள் எல்லாம்
பரபரப்பாய் உள்நாட்டு வாணிகத்தை விட்டே
அயல்நாடு சென்று பணம்குவித்து வாழ்ந்தார்!
இயல்பென்று வாழ்ந்திருந்தோம் நாம்.

ஏற்றுமதி வாணிகம் நின்றுபோன காலமிது!
மாற்றுவழி இன்றித்தான் விளையும் பொருளனைத்தும்
நாட்டுமக்கள் வாங்க தரமான நம்பொருள்கள்
நாட்டுக்குள் எங்கும் கிடைத்திருக்க சாமான்யன்
கேட்டுத்தான் வாங்கி அனுபவிக்கும் கோலங்கள்
ஆக்கபூர்வ மாற்றந்தான் பார்.

கொரோனாவால் தத்தளித்து வாழ்ந்தாலும் இவ்வுலக
வாழ்வின் இயக்கமே நின்றாலும் சாமான்யன்
வாழ்வில் சமத்துவ  மாற்றத்தைக் காணவைத்த
வாழ்க்கை கொரோனாவால் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home