மீனாட்சி அம்மன் திருமணம்
பழைய மண்டபமும் புதிய மண்டபமும்!(1981)
( நன்றி:பட்டிமன்ற பேச்சாளர் சண்முக திருக்குமரன் காணொளி.)
மேனாள் தக்கார்
வி்.என். சிதம்பரம் சாதனை!
மீனாட்சி அம்மன் திருமணம் எல்லோரும்
பார்ப்பதற்கு ஏற்ற இடமாக மண்டபம்
போதவில்லை, ஆதலால் தக்கார் சிதம்பரம்
வேறிடத்தில் மண்டபத்தைக் கட்டிவிட்டார்! பேதமின்றி
தேடிவந்து மீனாட்சி அம்மன் திருமணத்தைக்
கூடிநின்று பார்த்து மகிழ்கின்றார் பக்தர்கள்!
சாதித்த தக்காரை வாழ்த்து.
தங்கத்தேர் சமத்துவம்!
( சொன்னவர்: திரு.மலையலிங்கம்)
தங்கத்தேர் இழுக்க சுழற்சிமுறை கொண்டுவந்தார்!
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவர் வந்திழுத்தார்!
மேளவாத்யக் காரர்
புலவர் கவிஞரென
ஆர்வமுடன் வந்தே இழுத்தனர்!ஆட்டோவை
ஓட்டுகின்ற ஓட்டுனர் வந்தார் ஒருமாதம்!
நாட்டிய சாதனையை வாழ்த்து.
சென்னை நகரிருந்து மாமதுரை ஊருக்கு
வந்த தொடர்வண்டி தன்னிலே
வந்திறங்கி
நின்றார் சிதம்பரம்! ஆட்டோக்கள் வாசலிலே
அன்னாரின் காருக்கு முன்னால் அணிவகுத்துச்
சென்றது சொக்கிகுள வீடுவரை நன்றியுடன்!
அந்த அணிவகுப்பை எண்ணினால் மெய்சிலிர்க்கும்!
இந்த வரலாறை யார்மறுக்கக்
கூடுமிங்கே?
வண்டமிழ்த் தக்காரை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home