அம்மாவின் கைவண்ணம்
என் அம்மாவின் கைவண்ணம்!
1954 ஆம் ஆண்டு
ஓட்டைக்காலணா பை!
( இருக்கிறது தேடவேண்டும்?
காலணாக்கள் அன்றோ இரண்டு உருவுண்டு!
ஓட்டையுடன் ஒன்றும் ஓட்டையின்றி ஒன்றுமுண்டு!
ஓட்டையுடன் காலணாக்கள் வைத்தடுக்கிக் கைப்பையை
ஆற்றலுடன் தைத்திருந்தார் அம்மாதான் அக்காலம்!
காட்டினார் எங்களிடம் அன்று.
பாசிக்கூடை
ஓலையில் பின்னிய கூடை! அதன்மேல்
பாசி அழகாய்ப் பதித்திருக்கும் கண்கவரும்
வேலைப்பா டிங்கே அருமைதான்! அம்மாவின்
ஓய்வுநேர ஆக்கம் இஃது.
மதுரை பாபாராஜ்
1954 ஆம் ஆண்டு
ஓட்டைக்காலணா பை!
( இருக்கிறது தேடவேண்டும்?
காலணாக்கள் அன்றோ இரண்டு உருவுண்டு!
ஓட்டையுடன் ஒன்றும் ஓட்டையின்றி ஒன்றுமுண்டு!
ஓட்டையுடன் காலணாக்கள் வைத்தடுக்கிக் கைப்பையை
ஆற்றலுடன் தைத்திருந்தார் அம்மாதான் அக்காலம்!
காட்டினார் எங்களிடம் அன்று.
பாசிக்கூடை
ஓலையில் பின்னிய கூடை! அதன்மேல்
பாசி அழகாய்ப் பதித்திருக்கும் கண்கவரும்
வேலைப்பா டிங்கே அருமைதான்! அம்மாவின்
ஓய்வுநேர ஆக்கம் இஃது.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home