கொரோனா! கொரோனா!
யாரைத்தான் நம்புவதோ பேதையின் நெஞ்சம்?
அரசுகளை நம்புவதா? இல்லையிங்கே நாளும்
பரபரக்கும் ஊடகத்தை நம்புவதா? இங்கே
மருத்துவரை நம்புவதா?
ஓமியோ பதியின்
மருத்துவரை நம்புவதா?
சித்தவைத்யம் சொல்லும்
மருத்துவரை நம்புவதா?
இல்லை இயற்கை
மருத்துவரை நம்புவதா?
நோயெதிர்ப்பைக் கூட்டும்
உணவுகளை நம்புவதா?
உள்ளம் மயங்க
அவரவர்கள் எங்கும்
கொரொனா தவிர்க்க
வழிசொல்லும் போது
தத்தளிக்கும் நாமோ
எதைநம்பி வாழ்வது சொல்?
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home