இலக்கியக் காட்சி
முத்தொள்ளாயிரம் 2
தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு – 2
சேரன் குதிரைகள் பூட்டிய தேரிலே
வீர உலாவரும் கோலத்தைப் பார்ப்பதற்கு
ஆர்வமுடன் தாழ்திறந்தே துள்ளும் மகள்களைப்
பார்க்க விடாமல் தடுப்பதற்குத் தாழ்போடும்
தாய்மார்கள் என்றேதான் தாழ்நீக்க தாழ்போட
மாறிமாறி செய்ததில் தாழ்தேய்ந்து போனதாம்!
தாய்மாரின் எண்ணமும் பொன்மகள்கள் எண்ணமும்
ஈடேற வில்லையே அங்கு.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home