Sunday, June 14, 2020

திருமதி. மாலதி இராமச்சந்திரன்
கொள்ளுப்பாட்டி!
மகள் உமா-- இராம்குமார் இணையர்
பாட்டி-- தாத்தாவானார்!

14.06.20

தமிழாதித்யன்-- திவ்யா இணையருக்கு மகள்!

மகள்வழி வந்த மகளிங்கே பேத்தி!
நடமாடும் பாட்டி உறவை உயர்த்தி
அகங்குளிர பேத்தி, மகளைத்தான் பெற்றே
அகத்திலே பாட்டியைக் கொள்ளுப்பாட்டி ஆக்கி
முகம்மலர அம்மாவைப் பாட்டியாக்கி  அப்பா
அசராத தாத்தாவாய் ஆக்கிவிட்டார் இன்று!
மகிழ்ச்சியில் வாழ்க திளைத்து.

திவ்யா தமிழுக்குப் பொன்மகள் வந்ததால்
அம்மாவாய் தந்தையாய் ஆனார்கள்! நல்லறத்
தென்றல் தமிழுடைய பெற்றோர் முகம்மலர
அன்பான தாத்தாவாய் பாட்டியாய்  ஆனார்கள்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

வாழ்த்தும் இதயங்கள்
பாபா தாத்தா வசந்தா பாட்டி

0 Comments:

Post a Comment

<< Home