Friday, June 12, 2020

சங்கச் சுரங்கம் உரை!

தலைப்பு: கடவுள் ஆயினும் ஆக

12.06.20

பாலா பல்லாண்டு வாழ்க.

நற்றிணைப் பாடலை பாலா எளிமையாய்
கற்றறிந்தோர் முற்றத்தில் சேர்க்கின்றார் வாழ்த்துகிறேன்!
அற்புத ஆற்றலால் சங்கச் செய்யுளை
நற்சுவைச் சாறாக்கித் தந்தே மகிழ்கின்றார்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

கடவுளைக் கேள்வி கேட்ட மகளிர்!

கேள்விகள் கேட்ட  மகளிரைக் காண்பது
ஆகச் சிறப்பான சங்க இலக்கியத்தில்!
ஆணித் தரமாகச் சொன்னதை வாழ்த்துவோம்!
தேன்தமிழ் தந்த சிறப்பு.

LADIES AND GENTLEMEN!

காய்கதிர்ச் செல்வன், மகளிரை ஆடவரைச்
சான்றுக் கழைத்ததைக் கண்முன்னே காட்டிய
ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தோம் நட்புடன்!
ஏற்றம் தமிழுக் குணர்.

கெடாவெட்டு அலப்பறைகள்!

மதுரத் தமிழை மதுரை மொழியில்
தடுமாற்றம் இன்றி இயல்பாகத் தந்த
நறுந்தமிழ் பாலா அணுகுமுறை வாழ்க!
புதுமை எளிமையை வாழ்த்து.

பல்வேறு சாமியாடி சொன்னாலும் தான்நினைத்த
உள்ளத்துக் கேள்வியைக் காதல் தலைவியோ
உள்ளபடி கேட்டுத் தலைவனைப் போற்றிய
தெள்ளுதமிழ்ப் பண்பாட்டை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

பாலாவின் வாழ்த்து
அருமை....💐💐💐
வேள்வியில் விடை கிடைப்பதில்லை
கேள்வியில் தான் கிடைக்கிறது

இமயவரம்பனின் வாழ்த்து:

பாலாவின் சங்கச்சுரங்கத்து உரையை
பலாக்கனியின் சாறாக
இனிக்க இனிக்க அனைத்தையும்
உள்ளடக்கி
தெள்ளத் தெளிவாக
எமக்கு ஈந்தளித்த தீந்தமிழே! மதுர கவியே!
வணங்குகிறேன் வாழ்த்தி!
👏👏👏👏👏👏👏👏👏
பட்டுத் தெறித்த முத்துக்கள்!

வானத்தில் இருந்து வரவழைக்க முடியாது
பூமியில் இருந்து பொறுக்கத்தான் வேண்டும்

மலைமகன்
தமிழர் தலைமகன்
-------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home