Wednesday, August 05, 2020

இன்பத்துப்பால் குழந்தைகளுக்காக 1084-1090

இன்பத்துப்பால் குழந்தைகளுக்காக

மகளின் கோபம்

1084.
யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்.

என்கண்ணுல்ல
செல்லமில்ல!
நான் ஏதோ கோபத்துல
அடிச்சுட்டேன்! கோபமா?
ஆமா!

நான் அந்தப்பக்கமா
பாக்குறப்ப
நீ என்னப் பாக்குற?
கோபத்தோட பாத்து
மெல்ல சிரிக்குற!
உன்னப் பாக்குறப்ப
நெலத்தப் பாக்குற!
இதுவும் அழகாத்தான் இருக்கு!

குறள் 1085

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

 மகளின் கோபம்

ஏங்க!
நம்ம மகளுக்கு
அவகேட்ட சாப்பாட
நேத்து தரலயாம்!
சொன்ன மாதிரி
கொண்டுவரலனு
பள்ளித் தோழிகள்
கேலிசெஞ்சாங்களாம்!
அதுக்காக பாடா படுத்திட்டா!
அழித்துவிடும் நெருப்போ?
அழகான விழியோ? மானின் மருட்சியோ?
வள்ளுவர் சொல்றதப் போல
இந்த மூணுமே
அவகண்ல தெரியுதுங்க!

குறள் 1086
 
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்.
 
அம்மா!
நீயேசொல்லு!
அப்பா
மகளை திட்டக்கூடாதா?
அப்பிடி கோவிச்சுக்குறா!
புருவம்வேற வளைஞ்சு 
இருக்கு!
பயமாவேற இருக்கு!
நேரா இருந்துருந்தா
கண்ணு
இப்படி பயமுறுத்துமா?
 
குறள் 1087
 
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
 
ஏண்டியம்மா
பத்தும்பத்தாம
மேலாடை!
இவ்வளவுநகையைவேற
போட்டுக்கிட்டு
நிக்கிற?
பாத்தாஎப்படி
இருக்குது
தெரியுமா?
குட்டியானை
முகப்படாம்
போட்டுக்கிட்ட
மாதிரி இருக்குதும்மா
தாயே!
 
குறள் 1088
 
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
 
நான்மேடையில்
முழங்கினால்
வலுவான வாதங்கள்
கரைபுரண்டே ஓடும்!
போட்டிகளில் வெற்றிதான்!
ஆனால் 
என்மகளின்
ஞான ஒளிவீசும்
நெற்றியைக் கண்டால்
எல்லாம் அடங்கிவிடும்!
தோல்விதான்!
மேடையில்
சிகரம்!
மகளின்முன்
தகரம்!
 
குழந்தைக்காக
 
குறள் 1089
 
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து.
 
அம்மாடி!
நம்ம மகளைப்
பாரேன்!
மாசு மருவற்றப்
பெண்மான் பார்வை! குழந்தைப்பார்வை!
பெண்குழந்தைக்கே உரிய
இயல்பான நாணம்!
இதுவே அவளுக்கு அணிகலன்தான்!
வேறு அணிகலன்கள்
இவளுக்குப் போடனுமா என்ன?

குறள் 1090
 
உண்டார் கணல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
 
 இந்தச்
சின்னவயசுல
நம்ம மகளுக்கு
இருக்குற அறிவப்பாத்தியா!
கேள்விகேட்டுத்
தெணறவக்கிறா!
என்னமாதிருக்குறள்சொல்றா!
சேட்டையும்பண்றா!
மதுவைக்
குடிச்சாதான்
போதைவருமாம்!
இவளப்பாத்தாலே
எனக்குப்
பெருமித போதைவருதே!
நாம் பெற்ற செல்லமில்ல!

தொடரும்

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home