Tuesday, October 27, 2020

மதுரை நினைவுகள்

 முறுக்கு விற்பவர்

மலரும் நினைவுகள்-- மதுரை


முறுக்கோ! முறுக்கு!


1957 களில்


மோதிலால் சாலை இரண்டிலே மாலையில் 

கூடி படியில் அமர்ந்தே பேசுவார்கள்!

ஓடியாடி நாங்கள் விளையாடும் காட்சியுண்டு!

நாடிவந்தே விற்பார் முறுக்கு.


ஒடிசலான தேகம்! உயரமான தோற்றம்!

நடையிலே  வேகம்! தலையிலே கூடை!

படைபோல பிள்ளைகள் சூழ வருவார்!

தலையில் இருக்கின்ற கூடை இறங்கும்!

அலைபாயும் உள்ளம் முறுக்குகளைக் கண்டு!

மலைப்போம் முறுக்குவகை கண்டு! 


வட்ட வடிவம் பெரிய முறுக்குகள்!

அட்டகாச முள்முறுக்கு! சாதா முறுக்குகள்!

எப்படி விற்கும் தெரியுமா? வேகமாய்

விற்றே நகர்வார் சிரித்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home