மதுரை நினைவுகள்
மதுரை நினைவுகள்!
சிகைதிருத்தக் கடை!
மோதிலால் இரண்டாம் தெரு!
1956 களில்!
சிகைதிருத்த விற்பன்னர்கள்!
ராமன்-- லெட்சுமணன்!
வீட்டுக் கருகில் சிறிய கடையொன்று!
நாற்காலி ஒன்று இளைஞர், பெரியவர்க்கு!
ஏற்ற இறக்கப் பலகை சிறுவர்கள்
போட்டுத் தரையிலே உட்கார! உட்கார்வேன்!
ராமரோ, லெட்சு மணரோ முடிவெட்ட
வாகாக கையில் பொறியுடன் வந்திடுவார்!
ஆகா! எனக்கருகில் பின்னால் அமர்ந்திடுவார்!
ஆர்வம் பெருக தலையில் பொறியோடும்!
ராமனின் கைகளோ என்தலையைப் பற்றிநிற்க
ஏறும் இறங்கும் முடிகள் குறந்துவிடும்!
வீடுநோக்கி ஓடுவேன் காசு கொடுத்துவிட்டு!
நாடுவார் காத்திருக்கும் பையனைப் பார்த்திடுவார்
ஓடும் பொறியை எடுத்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home