பெண்ணே பேராற்றல்! 7. பத்மாஸனி
பெண்ணே பேராற்றல்!
7. பத்மாஸனி
கணவருக்கு வீரத் திலகமிட்டு நாட்டின்
விடுதலைப் போரில் சிறைக்குச் செல்ல
மனஉறுதி கொண்டே அனுமதித்த மங்கை!
அனல்கக்கப் பேசிய மாது.
பல்வேறு போராட்ட நாயகியாய் மாறினார்!
தொல்லைகள் வெங்கொடுமைத் தாக்குதல்கள் என்றேதான்
சொல்லொண்ணாத் துன்பத்தை ஏற்றேதான் வாழ்ந்திருந்தார்!
எல்லோரும் ஏற்றார் மதித்து.
கணவருடன் தோளோடு தோள்நின்றே தொண்டை
மனதார ஆற்றினார்! நீலன் சிலையை
அகற்ற
தனது நகைகளை விற்றுப் பணத்தை
அளித்தே அனுப்பினார் அன்று.
சொந்த நிலத்திலே பாரதி கூடத்தை
அன்றே தொடங்கி நடத்தினார்! வீரராம்
பண்புத் திலகர் பெயரில் இரவுநேரப்
பள்ளி நடத்தி விடுதலை பற்றிய
நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தப் பாடுபட்டார்!
வல்லவரை எண்ணி வணங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home