மருமகன் மு.ரகுவீர கணபதி்க்கு பிறந்தநாள் வாழ்த்து.
மருமகன் மு.ரகுவீர கணபதி்க்கு பிறந்தநாள் வாழ்த்து.
அகவை: 58/59
நாள் : 14.11.2021
இல்லற முத்துக்கள்:
மனைவி: அமுதா மகள்: நான்சி
அகவைத் திருநாள்:
ஐம்பத்து எட்டு நிறைவுசெய்தே ஐம்பத்து
ஒன்பதில் இன்றோ அடியெடுத்து வைக்கின்றாய்!
பெற்றோரின் ஆசிகள் அன்பு மனைவியின்,
செல்ல மகளுடைய வாழ்த்துகளும் சூழ்ந்திருக்க
பல்லாண்டு வாழ்கவே நீடு.
அரசுப் பணியில் உயர்வு:
அரசுலே முப்பத்து நான்காண்டு தொண்டு
பலரிங்கே பாராட்டும் பாங்கிலே செய்து
பலதுறையில் கொண்ட அனுபவத்தால் இன்றோ
உதவி இயக்குநராய் இங்கே வளர்ச்சித்
துறையில் விளங்குகின்றாய்! தமிழ்போல வாழ்க!
நறுந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
18 சாதனை மாநில அரசு விருதுகள்
2 மத்திய அரசு விருதுகள்:
தந்தை கடமை மகனுக்குச் செய்ததாலே
மைந்தன் திறமையால் முன்னேறி தந்தைக்கு
நற்பெயர் வாங்கியே தந்தார்! தன்மகனை
அற்புதமாய்ப் பாராட்டும் பாங்கினைப் பார்ப்பதால்
பெற்ற பொழுதினும் தாயோ மகிழ்கின்றாள்!
எப்போதும் வாழ்க மகிழ்ந்து.
வாழ்த்தும் இதயங்கள்
அம்மா திருமதி லெட்சுமி்முத்துவீரன்
மாமா மதுரை பாபாராஜ்
அத்தை வசந்தா
மாமா நடிகர் கெஜராஜ்
அத்தை மல்லிகா
திருமதி ராஜி ஜோதிகுமார்
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home