மக்களாட்சி
மக்களாட்சி!
பெரும்பான்மை ஆணவமும் தப்பு! மனமே
சிறுபான்மை ஆத்திரமும் தப்புதான்! நாளும்
நடுநிலை என்ற மனப்பான்மை ஒன்றே
வடுவின்றி வாழவைக்கும் நம்பு.
மற்றவர்க்கு உள்ளதை என்றும் பறிக்காதே!
இத்தரணி வாழ்விலே எல்லார்க்கும் எல்லாமும்
எப்போதும் தங்குதடை இன்றிக் கிடைத்தால்தான்
மக்களாட்சி போற்றப் படும்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home