நமது உடலுறுப்புகளும் உணர்ச்சிகளும்
ஐயா துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பியதற்குக் கவிதை:
சீன மருத்துவர்கள் ஆராய்ந்து நம்முடலைப்
பேணுகின்ற நம்முறுப்பு எல்லாம் பழுதடைய
காரணம் நம்முணர்ச்சி ஒவ்வொன்றும் ஓருறுப்பைப்
பாதித்தல் என்கின்றார் பார்.
எதிர்மறை உணர்ச்சிகளும் பாதிக்கும் உறுப்புகளும்!
Liver and anger
கல்லீரலும் கோபமும்!
கோப உணர்ச்சியால் கல்லீரல் பாதிக்கும்!
கோபத்தைக் கைவிட வள்ளுவரும் தெள்ளுதமிழ்
சான்றோரும் நாளும் அறிவுரை கூறுகின்றார்!
பாதிப்பில் சீரணக் கோளாறும் மேற்கொண்டு
வேதனையைத் தூண்டும் தலைவலி உண்டாகும்!
கேட்டு நடந்தால் நலம்.
Heart and joy
இதயமும் மகிழ்ச்சியும்!
எப்போதும் நாமோ மகிழ்ச்சியாய் வாழவேண்டும்!
எப்போதும் வாடி வதங்கி மகிழ்ச்சியின்றி
வாழ்தல் இதயத்தைப் பாதிக்கும்! சீர்குலைத்தே
தூக்க முறைகளை மாற்றிவிடும்! நாள்தோறும்
ஊக்க மிழப்போம் உணர்.
Spleen and worry
மண்ணீரலும் மனக்கவலையும்!
மண்ணீரல் பாதிப்பைத் தந்தே மனக்கவலை
உண்டாக்கும் கோளாறு நம்நலத்தைச் சீர்குலைக்கும்!
அன்றாடம் நோயெதிர்ப்பில் சீரணத்தில் கோளாறு
என்றுமே சோர்வாய்க் காணவைக்கும்!
ஆகவே
என்ன நடந்தாலும் நாமோ மனக்கவலை
கொள்தல் நலத்திற்குக் கேடு.
நுரையீரலும் துக்கமும்
Lungs and Grief!
துக்கத்தால் நாளும் நுரையீரல் பாதிக்கும்!
அக்கறை காட்டாமல் வாழ்ந்திருந்தால் மூச்சளவு
சற்றே குறையும்! அடிக்கடி மூக்கடைப்பு
மற்றும் சளிபடர்ந்தே திக்குமுக் காடவைக்கும்!
துக்கம் நலத்திற்குக் கேடு.
Kidneys and fear
சிறுநீரகங்களும் அச்சமும்!
அச்சத்தில் வாழ்வோர் சிறுநீ ரகங்களோ
எப்படியும் பாதிக்கும் என்றேதான் கூறுகின்றார்!
இத்தகைய பாதிப்பால் உண்டு முதுகுவலி
மற்றும் சிறுநீர் அடிக்கடி போகவைக்கும்!
அச்சம் தவிர்ப்பதற்குப் பார்.
Stomach and anxiety
வயிறும் பதட்டமும்!
வாழ்வோ பதட்டமாக மாறிவிட்டால்
நம்வயிறு
நாள்தோறும் பாதிப்பில் வாடும்! அசீரணம்
ஏற்படும்! மேலும் வயிறிலே உப்புசம்
தோன்றும்! பசிப்பதில் கோளாறு உண்டாகும்!
வாழ்வில் பதட்டம் தவிர்.
Gallbladder and resentment
பித்தப்பையும் மனக்கசப்பும்!
தீர்க்க முடியா மனக்கசப்பில் வாழ்பவர்கள்
நாள்தோறும் பித்தப்பை பாதிப்பில் வாழ்வார்கள்!
சீரணக் கோளாறு மற்றும் தலைவலியும்
வேர்கொள்ளும்! உங்கள் உடல்நிலை பாதிக்கும்!
நாளும் மனக்கசப்பை வெல்.
Pancreas and overthinking
கணையமும் அதிக சிந்தனையும்!
எப்போதும் சிந்தனையில் மூழ்கியே வாழ்பவரின்
அக்கறை யில்லாத தன்மை கணையத்தை
எப்படியும் பாதிக்கும்! ரத்தத்தில் சர்க்கரையின்
உள்ளளவு மாறிவிடும்! சீரணக் கோளாறு
முற்றிலும் மாறும்! அளவுக் கதிகமாக
சிந்திக்கும் போக்கைத் தவிர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home