வேடிக்கை பார்க்கின்றோம்
வேடிக்கை பார்க்கின்றோம்!
26.09.23
அக்கா வீட்டில் எழுதியது
கண்ணீரில் தட்டுத் தடுமாறி நான்பேச
கண்ணீரில் தட்டுத் தடுமாறி மனைவிபேச
உள்ளத்தின் பரிமாற்ற எண்ணங்கள் தழுதழுக்க
இங்கேநான் அங்கே அவளும் தேம்பியழ
எங்கள் நிலையெண்ணி வாழ்வை நொந்துகொண்டோம்!
என்று மாறுமோ? எப்படி மாறுமோ?
என்றே மணித்துளிகள் யுகமாக
செல்ல மறுக்கின்ற கோலத்தில்
வாழ்கின்றோம் நாங்கள் நாள்தோறும்!
தூக்கம் வரவில்லை சிரித்து நடிக்கின்றோம்
ஏக்கம் வலைவிரிக்க சிக்கித் தவிக்கின்றோம்
எங்களுக்கேன் சோதனையும் வேதனையும்
என்ன தவறுசெய்தோம் எங்களுக்குப் புரியவில்லை
இன்னும் எத்தனைநாள் சொல்ல வழியில்லை!
இன்றுமாறும் நாளைமாறும் என்றே வாழ்கின்றோம்
என்றுமாறும் என்றேதான் எங்களுக்கே
தெரியவில்லை! புரியவில்லை! கலங்கித் தவிக்கின்றோம்!
முதுமைப் பருவத்தில் இத்தனை உளைச்சலா!
வேடிக்கை பார்க்கின்றோம் வேறென்ன செய்வதோ?
மதுரை பாபாராஜ்
26.09.23
0 Comments:
Post a Comment
<< Home