யாரை நோவது?
தெருவிலே தேங்கிநின்ற தண்ணீரில் பந்து
விழுந்து நடந்துசென்ற அன்பர்மேல் பட்டே
கலைந்தது சட்டை! சிறுவனைப் பார்த்தே
கடிந்துகொண்டு சென்றார்! திடீரென்று வானில்
பறந்துவந்த காகமோ எச்சமிட அன்பர்
உடையில் விழுந்தது! பார்த்தார் உடனே!
சிறுவன் சிரித்தான்! அவரும் நகர்ந்தார்!
நடப்பதை யாரறிவார் சொல்?
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home