பெற்றோரை அழவைக்காதே
பெற்றோரை அழவைக்காதே!
பெற்றோரை வாழவைத்துப் பார்க்கின்ற பிள்ளைகள்
இத்தரணி போற்ற மகிழ்ச்சியாய் வாழ்வார்கள்!
பெற்றோரை நாளும் அழவைக்கும் பிள்ளைகள்
எத்தகையோர் என்றாலும் தூசு.
சொல்ல முடியாத துன்ப துயரங்கள்
எல்லை களைமீறிச் செல்லும் பொழுதிலே
உள்ளம் துடிக்கிறது! கண்ணீர் வழிகிறது!
துள்ளித் துவள்கிறது நெஞ்சு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home