Saturday, May 17, 2025

கலைமாமணி ஏர்வாடியார்



 கலைமாமணி ஏர்வாடியார் அவர்களின் 

78 ஆம் பிறந்தநாள் விழா வாழ்த்து!

நாள்: 18.05.2025

இலக்கிய ஏரால் கவிதை உறவை

உழவுசெய்த ராதா கிருஷ்ணனை வாழ்த்து!

வளர்தமிழ்போல் வாழ்க வளர்ந்து.


வங்கிப் பணிசெய்த போதும் மொழிபெயர்ப்பு

வங்கிப் பணிச்சொற்க ளுக்கேதான் செய்திட்ட

தன்னிக ரற்ற  கலைமா மணிவாழ்க! 

பண்பாளர் வாழ்க வளர்ந்து.


குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ

சிறப்புடன் வாழ்க! நலமுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home