நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
சிலநேரம் நம்மையோ சுற்றி இருக்கும்
உலகம் சினப்படுத்தும்! தூண்டிவிடும்! நாமோ
அமைதியாய்ப் பார்த்து புதிய வழிக்கு
அமைந்துள்ள வாய்ப்பாய்க் கருதத்தான் வேண்டும்!
நமக்கவை பாடத்தைக் கற்றுத் தரலாம்!
மனதிலே சிந்தனையைத் தூண்டலாம்! நாமோ
கவனமுடன் வாழ்தலே நன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home