அறிஞர் அண்ணா
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா!
திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்!
(பாடலின் ராகம்)
மெரினா கடற்கரையில்
நீ சிரித்தால் அண்ணா
தமிழர்கள் இதயத்திலே
எதிரொலிக்கும்!
தமிழோடு உறவாடி நாவசையும்
உன்
தமிழ்ப்புகழ் பாடியே உயிராடும்
மெரினா கடற்கரையில்
நீ சிரித்தால் அண்ணா
தமிழர்கள் இதயத்திலே
எதிரொலிக்கும்!
காஞ்சியிலே பிறந்த மழலைப் பழம் நீ
தூளியிலே ஆடிவந்த அன்புப்பழம்
பெரியார் சோலையிலே முதிர்ந்த பழம்
கொள்கைப் பசியோடு வருவோர்க்கு அறிவுப்பழம்!
தம்பிகளின் கழகக் கோட்டையுண்டு
உன்
கண்ணியத்தைக் காப்பதற்குப் படையுமுண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
மெரினா கடற்கரையில்
நீ சிரித்தால் அண்ணா
தமிழர்கள் இதயத்திலே
எதிரொலிக்கும்!
தமிழோடு உறவாடி நாவசையும்
உன்
தமிழ்ப்புகழ் பாடியே உயிராடும்
மெரினா கடற்கரையில்
நீ சிரித்தால் அண்ணா
தமிழர்கள் இதயத்திலே
எதிரொலிக்கும்!
மதுரை பாபாராஜ்



0 Comments:
Post a Comment
<< Home