Saturday, March 28, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 23

 குழந்தைகளுக்கு குறளமுதம் 23

மக்கட்பேறு

குறள் 23:

தம்பொருள் என்பதம் மக்கள்

 அவர்பொருள்

தந்தம் வினையான் வரும்.(63)


அத்தை மாமா வாங்க!

குறளின் பொருளைச் சொல்லுங்க!


எங்கள் பெற்றோர் எங்களை

வளர்த்தார் இல்லறம் தந்துவிட்டார்


நாங்களும் கடமையில் திறமைகள்

காட்டி வந்தோம் முன்னேறி!


வாய்ப்பைத் தந்தோம் உங்களுக்கு

உங்கள் திறமையைக் காட்டுங்கள்!


நீங்களும் உங்கள் வாழ்க்கையில்

உழைப்பால் உயர்ந்து உயர்ந்தேதான்


சாதனை யாளர் ஆகுங்கள்!

வரலா றாக மாறுங்கள்!


எங்கள் பெற்றோர் செல்வங்கள்

இந்தத் தரணியில் நாங்கள்தான்!


நீங்கள் எங்கள் செல்வமென்றே

உங்கள் செயலால்  நாட்டுங்கள்!

0 Comments:

Post a Comment

<< Home