Saturday, March 28, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 13

 குழந்தைகளுக்கு குறளமுதம் 13

2. வான்சிறப்பு

குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர்

 வியனுலகத்து

உள்நின் றுடற்றும் பசி.


அணிலே  அணிலே ஓடிவா

அழகாய் அழகாய் ஓடிவா


இந்தக் குறளைப் படித்துப்பார்

படித்துப் பார்த்துப் பொருளைச்சொல்!


பாப்பா நானும் படித்துவிட்டேன்

பொருளைச் சொல்றேன் பிடித்துக்கொள்!


உலகைச் சூழ்ந்தே கடலுண்டு!

கடலுக் குள்ளே  நீருண்டு!


இருந்த போதும் உணவாக

நமக்கு இங்கே உதவாது!


நமது உயிரை வான்மழைதான்

உணவைத் தந்தே காப்பாற்றும்!


வான்மழை இங்கே பொய்த்துவிட்டால்

பசியால் உயிர்கள் வாடிவிடும்!


பருவ மழையே உயிர்நாடி!

இல்லை என்றால் துயர்கோடி!


0 Comments:

Post a Comment

<< Home