Friday, March 27, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 10

 குழந்தைகளுக்கு குறளமுதம் 10

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.


அக்கா இங்கே வாயேன்

குறளைச் சொல்லித் தாயேன்!


நாளை நானும் வகுப்பில்

சொல்ல வேண்டும் அக்கா!


அருமைத் தங்கை வர்ரேன்

குறளைச் சொல்லித் தர்ரேன்!


அன்னை தந்தை ஆசான்

நமக்கு நல்ல வழிகாட்டி!


அவர்கள் சொல்லை மதித்து

நாமும் இங்கே வாழ்ந்தால்


இந்தப் பிறவிக் கடலை

எளிதாய் நீந்திக் கடக்கலாம்!


அவர்கள் கூறும் அறவுரைகள்

வழியைக் காட்டும் ஒளிவிளக்கு!


அவர்களைத் தவிர்த்துச் சென்றால்

தத்த  ளிக்க  நேரும்!


இதனை உணர்ந்து வாழ்வோம்

இதயங் குளிர வாழ்வோம்!


அன்புத் தங்கை நீயும்

மனதில் வாங்கிக் கொண்டு


நாளை வகுப்பில் சொல்லு!

தலையை நிமிர்த்தி நில்லு!


 


0 Comments:

Post a Comment

<< Home