குழந்தைகளுக்கு குறளமுதம் ! 1
குழந்தைகளுக்கு குறளமுதம்!
அறத்துப்பால்
1.வழிபாடு
குறள் 1:
.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அம்மா இங்கே வாவா
அருமைக் குறளைச் சொல்லித்தா
இந்தோ வந்தேன் என்செல்லம்
குறளே அமுதம் என்செல்லம்
மொழியின் முதலோ அகரந்தான்
தமிழுக்கு அதுவே சிகரந்தான்
உலக மொழிகள் அனத்திற்கும்
முதலாம் எழுத்தே அகரந்தான்!
உலகின் மூலச் சான்றோர்கள்
ஆதி பகவன் எனச்சொல்வோம்!
இதுதான் முதலாம் திருக்குறளாம்
கற்பது உந்தன் கடமையாம்
நன்றி நன்றி என்னம்மா!
ஆசை முத்தம் உனக்கம்மா!

0 Comments:
Post a Comment
<< Home