Friday, March 27, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 4

 குழந்தைகளுக்கு குறளமுதம் 4


குறள் 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி

சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல


அம்மா அம்மா சொல்லித்தா

அடுத்த குறளைச் சொல்லித்தா

வாம்மா  நீதான் பக்கத்தில் 

வாகாய் நானும் சொல்லிடுவேன்

விருப்பு வெறுப்பு இல்லாமல்

வாழும் இறைவனைச் சரணடைந்தால் 

நமக்குத் துன்பம் நெருங்காது

நிம்மதி யோடு வாழ்வோம்நாம்

விருப்பு வெறுப்பு அற்றவர்கள்

இறைவன் நிலைக்கு ஒப்பாவார்.you

வள்ளுவம் சொல்லும் நற்கருத்தை

மனதில் ஏந்தி நடைபோடு.








0 Comments:

Post a Comment

<< Home