Friday, March 27, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 3

 குழந்தைகளுக்கு குறளமுதம்!

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.


அம்மா அப்பா வாங்க

அருகில் வந்து சொல்லுங்க

மூன்றாம் குறளைப் பாருங்க

முத்தாய்க் கருத்தைக் கூறுங்க

மலரைப் போன்ற மனதிற்குள்

போற்றும் இறைவன் திருவடியை

நினைத்தே வாழும் மாந்தர்கள்

நிலைத்த புகழுடன் வாழ்வார்கள்

அவரே வாழ்வின் வழிகாட்டி

அவரைப் போற்றி வாழ்வோம்நாம்

அந்தப் பண்பே புகழ்சேர்க்கும்

நீடு வாழ வழிகாட்டும்!

மனதில் பதித்துப் பின்பற்று

வையகம் உனது வசமாகும்!


0 Comments:

Post a Comment

<< Home