Friday, July 24, 2026

கவிஞர. முருகு


 தமிழையா முருகு அனுப்பிய படத்திற்குக் கவிதை!

காலை!

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில்

எழுந்தே உசுப்பும் கதிரவன் கோலம்!

கதிரின் வரவறிந்தே ஆடும் கதிர்கள்!

மகிழ்ந்தேன் ரசித்தேன் உணர்ந்து.

மதுரை பாபாராஜ்

நேயர் முருகுவின் விருப்பத்திற்கு இணங்க எழுதிய கவிதை!

மாலை!

நேயர் முருகுவின் விருப்பத்திற்கு

 இணங்க எழுதிய கவிதை!


மாலைப் பொழுதில் மறையும் கதிரவன்

மேலைத் திசையில் இறங்கும் அழகிலே

ஆடும் கதிர்களின் ஆடல் கலையிலே

வாழ்வை மறந்தேன் ரசித்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home