நதி எங்கே போகிறது ராகம்
நதி எங்கே போகிறது?
பாடலின் ராகம்!
குறளெங்கே போகிறது
வாழ்வியல் நோக்கி
வாழ்வெங்கே போகிறது
பொதுமுறை நோக்கி
முறையெங்கே போகிறது
ஒழுக்கத்தை நோக்கி
ஒழுங்கெங்கே போகிறது
உயர்வினை நோக்கி!
பார்வைகள் கோடிவரும்
குறள்கள் ஒன்று
கோணங்கள் கோடிவரும்
குறள்கள் ஒன்று
எண்ணங்கள் கோடிவரும்
குறள்கள் ஒன்று
கருத்துக்கள் கோடிவரும்
குறள்கள் ஒன்று!
இல்லறத்தில் நல்லறத்தை
வள்ளுவம் கூறும்
மாசின்றி வாழ்வதற்கு
வள்ளுவம் கூறும்
மனிதத்தைக் காப்பதற்கு
வள்ளுவம் கூறும்
அனைத்துக்கும் தீர்வுகளை
வள்ளுவம் கூறும்!
மதுரை பாபாராஜ்
[07/04, 18:53] Madurai Babaraj:
மிகச்சிறந்த பாடலின் வரிகளை எதார்த்தமான வார்த்தைகளால் புத்துணர்வு பெற்ற பாடலாக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய மனதை ஆழ்ந்து வருடிய வரிகள். தமிழ் ஆசிரியராக ஆக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு அது பலிக்காமல் போய்விட்டது. எங்கோ ஒரு மூலையிலாவது தமிழின் புலமை ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.*வாழ்க தமிழ்*
மணிகண்டன்
0 Comments:
Post a Comment
<< Home