கல்லூரிக் காலம்
மதுரைக் கல்லூரி (1965)
புகுமுக வகுப்பு
மதிப்பிற்குரிய ஆசிரியர்கள்:( நினைவில் நின்றவர்கள்)
தமிழய்யா பெயர் நினைவில்லை
ஆங்கிலம் திரு.நாகராஜன்,திரு.ஆராவமுதன்,
தாவரஇயல் திரு.ஸ்ரீகணேஷ்
மதுரை பெயரேந்தும் கல்லூரி தன்னில்
புகுமுக மாணவராய்ச் சேர்ந்து படித்தேன்!
வகுப்பிலே ஆங்கிலத்தில் ஆசிரியர் பேச
பதுமையாய் மாறி புரியாமல் கேட்டோம் !
அடுத்தடுத்த ஆசிரியர் ஆங்கிலப் பேச்சை
எடுப்பாகப் பார்த்துப் புரிந்ததைப் போல
நடந்தோம்! நடித்தோம் ! சிரித்து.
அழகப்பா கலைக் கல்லூரி(1966--69)
கூட்டு வகுப்பு:
தமிழ்:
திரு.இரா.சாரங்கபாணி
திரு.அர.சிங்கார வடிவேலன்
திரு.பிச்சை
தமிழய்யா மூவர் ! அருமையாய் பாடம்
தமிழ்மணக்க சொல்லித் தருவார்கள்
நன்கு!
தமிழ்ப்பாடம் கூட்டு வகுப்பு! தெளிவாய்த்
தமிழ்விளக்கம் கேட்டோம் மகிழ்ந்து.
ஆங்கிலம் கூட்டு வகுப்பு
ஆங்கில ஆசிரியர்கள்
திரு.குப்புசாமி
திரு.ரெங்கன்
திரு ஸ்ரீபதி
சேக்சுபியர் நாடகத்தைக் கண்முன்னே காட்டுவார்!
ஏட்டிலே உள்ளதுபோல் அங்கே நடித்திருப்பார் !
பார்த்து ரசித்தோம்! ஆங்கிலப் பாடத்தை
நேர்த்தியாக நல்ல விளக்கம் தருவார்கள்!
வாய்ப்பைப் பயன்படுத்தி னோம்.
விலங்கியல்
திரு.மெய்யப்பன்
EUGLENA Locomotion simile
Like a moving wind on the standing crops.
Unforgettable words.Still ringing in my ears.
விலங்கியல் பாடம் விறுவிறுப் பான
விளக்கங்க ளோடு நடத்தினார் நாளும்
விலங்குகள் சார்ந்த அறிவியல் செய்தி
பலதந்தார் கற்பதற்குத் தான்.
வேதியல்
ஆசிரியர் திரு.இராமசாமி
வேதியல் கூறுகளைச் சொல்லும் முறையிலே
தேடிவந்து கற்கின்ற நாட்டத்தை ஏற்படுத்தி
ஈடில்லா கற்கும் முறையில் நடத்தினார்!
வேதியல் ஆசானை வாழ்த்து.
தாவர இயல் வகுப்பு
ஆசிரியர்கள்
திரு.ஜெயராமன் பேராசிரியர்
திரு.சந்திரசேகர்
திரு.மாணிக்கம்
தாவரங்கள் பற்றி விளக்கங்கள் கூறினர்
ஆவலுடன் கற்றோம் பயிர்க்குடும்பம் பற்றியே
தேர்வெழுதி தேறி வெளிவந்தோம் நாட்டுக்குள்!
தாவரத்தில் பட்டம் படித்தாலும் வேலையோ
வேறு துறைகள்தான் சொல்.
கல்லூரி வாழ்க்கை மனங்கவர்ந்த வாழ்வாகும்!
எல்லோரும் நட்புடனே நாளும் பழகிடுவார்!
துள்ளித் திரிந்திருந்த கல்லூரிக் காலந்தான்
அள்ளி அனுபவம் தந்த வழிகாட்டி!
புள்ளினம்போல் வாழ்ந்தநாட்கள் பொன்.
மதுரை பாபாராஜ்
மதுரைக் கல்லூரி (1965)
புகுமுக வகுப்பு
மதிப்பிற்குரிய ஆசிரியர்கள்:( நினைவில் நின்றவர்கள்)
தமிழய்யா பெயர் நினைவில்லை
ஆங்கிலம் திரு.நாகராஜன்,திரு.ஆராவமுதன்,
தாவரஇயல் திரு.ஸ்ரீகணேஷ்
மதுரை பெயரேந்தும் கல்லூரி தன்னில்
புகுமுக மாணவராய்ச் சேர்ந்து படித்தேன்!
வகுப்பிலே ஆங்கிலத்தில் ஆசிரியர் பேச
பதுமையாய் மாறி புரியாமல் கேட்டோம் !
அடுத்தடுத்த ஆசிரியர் ஆங்கிலப் பேச்சை
எடுப்பாகப் பார்த்துப் புரிந்ததைப் போல
நடந்தோம்! நடித்தோம் ! சிரித்து.
அழகப்பா கலைக் கல்லூரி(1966--69)
கூட்டு வகுப்பு:
தமிழ்:
திரு.இரா.சாரங்கபாணி
திரு.அர.சிங்கார வடிவேலன்
திரு.பிச்சை
தமிழய்யா மூவர் ! அருமையாய் பாடம்
தமிழ்மணக்க சொல்லித் தருவார்கள்
நன்கு!
தமிழ்ப்பாடம் கூட்டு வகுப்பு! தெளிவாய்த்
தமிழ்விளக்கம் கேட்டோம் மகிழ்ந்து.
ஆங்கிலம் கூட்டு வகுப்பு
ஆங்கில ஆசிரியர்கள்
திரு.குப்புசாமி
திரு.ரெங்கன்
திரு ஸ்ரீபதி
சேக்சுபியர் நாடகத்தைக் கண்முன்னே காட்டுவார்!
ஏட்டிலே உள்ளதுபோல் அங்கே நடித்திருப்பார் !
பார்த்து ரசித்தோம்! ஆங்கிலப் பாடத்தை
நேர்த்தியாக நல்ல விளக்கம் தருவார்கள்!
வாய்ப்பைப் பயன்படுத்தி னோம்.
விலங்கியல்
திரு.மெய்யப்பன்
EUGLENA Locomotion simile
Like a moving wind on the standing crops.
Unforgettable words.Still ringing in my ears.
விலங்கியல் பாடம் விறுவிறுப் பான
விளக்கங்க ளோடு நடத்தினார் நாளும்
விலங்குகள் சார்ந்த அறிவியல் செய்தி
பலதந்தார் கற்பதற்குத் தான்.
வேதியல்
ஆசிரியர் திரு.இராமசாமி
வேதியல் கூறுகளைச் சொல்லும் முறையிலே
தேடிவந்து கற்கின்ற நாட்டத்தை ஏற்படுத்தி
ஈடில்லா கற்கும் முறையில் நடத்தினார்!
வேதியல் ஆசானை வாழ்த்து.
தாவர இயல் வகுப்பு
ஆசிரியர்கள்
திரு.ஜெயராமன் பேராசிரியர்
திரு.சந்திரசேகர்
திரு.மாணிக்கம்
தாவரங்கள் பற்றி விளக்கங்கள் கூறினர்
ஆவலுடன் கற்றோம் பயிர்க்குடும்பம் பற்றியே
தேர்வெழுதி தேறி வெளிவந்தோம் நாட்டுக்குள்!
தாவரத்தில் பட்டம் படித்தாலும் வேலையோ
வேறு துறைகள்தான் சொல்.
கல்லூரி வாழ்க்கை மனங்கவர்ந்த வாழ்வாகும்!
எல்லோரும் நட்புடனே நாளும் பழகிடுவார்!
துள்ளித் திரிந்திருந்த கல்லூரிக் காலந்தான்
அள்ளி அனுபவம் தந்த வழிகாட்டி!
புள்ளினம்போல் வாழ்ந்தநாட்கள் பொன்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home