Thursday, March 05, 2020

யார் குற்றம்?

ஆள்கின்ற கட்சி! எதிர்க்கட்சி இவ்விரண்டும்
நாள்தோறும் மோதும் நிலையெடுத்தால்
மக்களின்
வாழ்க்கை அடிப்படைத் தேவையை யார்பேச?
ஆள்பவர் ஆண்டவரைக் குற்றம் சுமத்துகின்றார்!
ஆண்டவர் குற்றமென்றாய்! ஆளவும் வந்துவிட்டாய்!
ஆண்டவர்க்கும் காரணம்! ஆள்பவர்க்கும் காரணம்!
ஆளவைத்தோர் எங்குசெல்ல கூறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home