அச்சுறுத்தும் கொரோனாவே போ!
அச்சத்தின் உச்சாணிக் கொம்பிலே மக்களை
நிற்கவைத்தே தொற்றிப் படர்கின்ற கொரோனாவே!
அற்ப வெறிகொண்டு மக்களைத் தாக்கித்தான்
கொட்ட மடிக்கின்றாய்! மக்களை வாழவிடு!
மக்களை வாட்டாமல் போ.
எப்படி வந்தாயோ அப்படியே போய்விடு!
குற்றமென்ன செய்தோம்? குவலயத்தைத் தாக்காதே!
வந்தவழி சென்று மறைந்துவிடு! வேண்டுகிறேன்!
எங்களை வாழவிடு நீ.
மதுரை பாபாராஜ்
04.03.2020

0 Comments:
Post a Comment
<< Home