பிரசாந்த் மருத்துவமனை,வேளச்சேரி!
தரமான சிகிச்சை தந்த
மகளின் முயற்சிக்கு நன்றி!
25.01.2020--01.02.2020
சாலினியின் ஈடுபாடும் அக்கறையும் நேரடியாய்
ஈவிரக்கம் கொண்டு தொடர்ந்து தொடர்புகொண்டு
ஆவலுடன் அங்கே வசந்தா சிகிச்சைபெற
ஏற்பாடு செய்தார் விரைந்து
மனைவி வசந்தா சனிக்கிழமை நோயால்
வலியெடுக்க சேர்த்தோம் அவசர மென்றே!
மளமள வென்றேதான் சோதனைகள் செய்தார்!
தரமாய் முடிவுகள் வந்தே கிடைக்க
படிப்படி யாகத்தான் தீர்மானம் செய்தார்!
அறிவுரை கூறினார் அழைத்து.
வசதியான தூய அறையில் படுக்கை!
சுழன்றே செவிலியர் சேவைகள் செய்தார்!
வசந்தா உணவை உணவகமே நாளும்
கொடுத்தார் எனக்குமட்டும் வீடு.
புதன்கிழமை காலை சிகிச்சைதான்
என்றார்!
உடன்பட்டோம்! சம்மதம் தந்தோம்
விழைந்து!
அறுவை சிகிச்சைக்( கு ) அழைத்தேதான் சென்றார்!
விறுவிறுப்பாய்ச் செய்தார் விரைந்து.
பித்தப்பைக் கற்கள் வயிற்றில் குடலிறக்கம்
தொப்புள் குடலிறக்கம் மூன்று சிகிச்சையை
வெற்றி கரமாக முடித்துவிட்டார்! நன்றியை
நற்றமிழால் கூறுகின்றோம் நாம்.
தங்கிய நாள்களில் மூன்றுவேளை சாப்பாடு
அன்பாக கொண்டுவந்து தந்தார்! மகள்சுபா
ஆவணங்கள் எல்லாம் கொடுத்ததும் காப்பீடு
ஆவணத்தை அங்கீ கரித்ததும் வீடுவந்தோம்!
சிறந்த சிகிச்சையைத் தந்தார் தொடர்ந்து!
நடந்த சிகிச்சையால் நன்கு வசந்தா
கடந்துவந்தாள் வேதனையை! சோதனையைத் தாங்கி!
நடந்தாள் குணமடைந்து தான்.
துபாயில் இருந்தே மருமகன் நித்தம்
தொடர்புகொண்டு பேசுவார் அக்கறை கொண்டு!
மகளோ சுழன்றே உழைத்தாள் நிதமும்!
மகனும் மருமகளும் வந்துவந்து
பார்த்தார்!
அகங்குளிர பேரன்கள் பாசப் பிழிவில்
மகிழ்ந்தோம் நெகிழ்ந்தோம் உவந்து.
.
மதுரை பாபாராஜ்
அறை எண் 2036
தரமான சிகிச்சை தந்த
மகளின் முயற்சிக்கு நன்றி!
25.01.2020--01.02.2020
சாலினியின் ஈடுபாடும் அக்கறையும் நேரடியாய்
ஈவிரக்கம் கொண்டு தொடர்ந்து தொடர்புகொண்டு
ஆவலுடன் அங்கே வசந்தா சிகிச்சைபெற
ஏற்பாடு செய்தார் விரைந்து
மனைவி வசந்தா சனிக்கிழமை நோயால்
வலியெடுக்க சேர்த்தோம் அவசர மென்றே!
மளமள வென்றேதான் சோதனைகள் செய்தார்!
தரமாய் முடிவுகள் வந்தே கிடைக்க
படிப்படி யாகத்தான் தீர்மானம் செய்தார்!
அறிவுரை கூறினார் அழைத்து.
வசதியான தூய அறையில் படுக்கை!
சுழன்றே செவிலியர் சேவைகள் செய்தார்!
வசந்தா உணவை உணவகமே நாளும்
கொடுத்தார் எனக்குமட்டும் வீடு.
புதன்கிழமை காலை சிகிச்சைதான்
என்றார்!
உடன்பட்டோம்! சம்மதம் தந்தோம்
விழைந்து!
அறுவை சிகிச்சைக்( கு ) அழைத்தேதான் சென்றார்!
விறுவிறுப்பாய்ச் செய்தார் விரைந்து.
பித்தப்பைக் கற்கள் வயிற்றில் குடலிறக்கம்
தொப்புள் குடலிறக்கம் மூன்று சிகிச்சையை
வெற்றி கரமாக முடித்துவிட்டார்! நன்றியை
நற்றமிழால் கூறுகின்றோம் நாம்.
தங்கிய நாள்களில் மூன்றுவேளை சாப்பாடு
அன்பாக கொண்டுவந்து தந்தார்! மகள்சுபா
ஆவணங்கள் எல்லாம் கொடுத்ததும் காப்பீடு
ஆவணத்தை அங்கீ கரித்ததும் வீடுவந்தோம்!
சிறந்த சிகிச்சையைத் தந்தார் தொடர்ந்து!
நடந்த சிகிச்சையால் நன்கு வசந்தா
கடந்துவந்தாள் வேதனையை! சோதனையைத் தாங்கி!
நடந்தாள் குணமடைந்து தான்.
துபாயில் இருந்தே மருமகன் நித்தம்
தொடர்புகொண்டு பேசுவார் அக்கறை கொண்டு!
மகளோ சுழன்றே உழைத்தாள் நிதமும்!
மகனும் மருமகளும் வந்துவந்து
பார்த்தார்!
அகங்குளிர பேரன்கள் பாசப் பிழிவில்
மகிழ்ந்தோம் நெகிழ்ந்தோம் உவந்து.
.
மதுரை பாபாராஜ்
அறை எண் 2036
0 Comments:
Post a Comment
<< Home