Sunday, March 01, 2020

அறுவை சிகிச்சைக்குப் பின் வசந்தா நலம்பெற்றாள் !

01.02.2020---29.02.2020

இமைபோல் பார்த்த
மகன்,மருமகள்,பேரன்களுக்கு நன்றி!

நால்வரும் காட்டுகின்ற அன்பில் திளைத்திருந்தோம்!
தூய்மை மிளிர்கின்ற பாச மழையிலே
நாள்தோறும் நாங்கள் நனைந்திருந்தோம் மெய்மறந்து!
வாழ்க்கையில் நாம்பெற்ற பேறு.

வசந்தா அறுவை சகிச்சை முடித்தே
மகனும்  மருமகளும் தங்களது வீட்டில்
வசதியாக வைத்தேதான் பார்க்க விழைந்தார்!
அகம்மலரச் சென்றோம் வசந்தா மகிழ்ந்தாள்!
உகந்த உணவுகள் அக்கறை கொண்டே
தகுந்தவண்ணம் பார்த்தே உடல்நலம்
காண
மகத்தாய் உழைத்தனர் சேர்ந்து.

பால்,குளம்பி!

காலை எழுந்ததும் பல்துலக்கி காத்திருப்போம்!
பாலும் குளம்பியும் ஏந்தி மருமகள்
ஆர்வமுடன் தந்தே நகர்ந்திடுவார் நாள்தோறும்!
ஈரமனம் கொண்டவரை வாழ்த்து.

சிற்றுண்டி/ சமையல்

காலைப் பொழுதில் முனியம்மா நேரத்தில்
நாடிவந்தே சிற்றுண்டி மற்றும் சமையலை
ஓடிஓடி செய்தே அனைவருக்கும் கட்டிவைத்தே
பேரன்கள் பள்ளிக்குச் செல்ல துணைபுரிவார்!
பள்ளிவண்டி செல்லும் நகர்ந்து.

எங்களுக்குச் சிற்றுண்டி தந்தே மகிழ்வார்கள்!
கொஞ்சநேரம் ஆகும்! பழச்சாறு தந்திடுவார்!
பஞ்சாய்ப் பறந்துவிடும் நேரம்! வடிசாறு
வந்துவிடும்! நீர்மோரும் நாங்கள் பருகுவோம்!
அம்மா! மதியஉணவு எங்களைத் தேடிவரும்!
உண்போம்! படுப்போம்! அயர்ந்து.

பானுவின் சேவை!

வசந்தாவின் கூந்தலைச் சீவி முடித்து
அசராமல் நாள்தோறும் செய்கின்ற ஆர்வம்
அசரவைக்கும் பார்ப்போர் வியப்பார்
மகிழ்ந்து!
பிறவிப் பயன்தான் இது.

மாலை

மதியநேரம் தூங்கி எழுந்திருப்போம்! பள்ளி
முடிந்தேதான் பேரன்கள் வந்திடுவார்! மாலைக்
குளம்பியும் பால்மற்றும் சுண்டல் தருவார்!
உளமினிக்க சத்யாதான் இங்கு.

இரவு

மாலை முனியம்மா வந்தே சமைத்திடுவார்!
தேவைகளைக் கேட்டு விருப்பமான தேர்வுகளை
ஆவலுடன் இங்கே சமைத்துப் பரிமாறும்
ஆர்வத்தைப் பார்ப்போம் வியந்து.

எந்தக் குறையுமில்லை  எங்களுக்கு இங்குதான்!
நன்முறையில் பார்த்து பராமரித்து நாள்தோறும்
அன்பாய்ப் பழகி குணமாக வைத்துவிட்டார்!
இந்த இரண்டுக் குடும்பமும் சேர்ந்தேதான்
தந்தமைக்கு நன்றி நவில்.

வசந்தா பாபாராஜ்

பி.கு: வடிசாறு -- Soup





0 Comments:

Post a Comment

<< Home