Wednesday, March 11, 2020

நற்கூடல் இலக்கியக் கழகம்

நற்கூடல் இலக்கியக் கழகம் தோற்றம்!

அறிவுரை தந்த சான்றோர்கள்!

தமிழறிஞர் சாலமன் பாப்பையா-- அறிவர்.சௌமிய நாராயணன்-- த.இராஜாராம்-- த.கு.சுப்ரமணியன்-- அறிவர் இரா.மோகன்-- திருமதி.நிர்மலா மோகன்-- அறிவர் க.சின்னப்பா மனிதத்தேனீ.ரா.சொக்கலிங்கம்-- க.ஜான்மோசஸ்-- ஹேப்பிமேன் கடை உரிமையாளர்.

தமிழ்ச்சங்க நிர்வாகிகள்:
தாளாளர். தனுக்கோடி பாண்டியன், செயலர்.முத்துமலைச் சாமி
வழக்குரைஞர்.சங்கரபாண்டியன்-- பேரா.ஜெயமூர்த்தி-- விஜயன்

இலக்கியக் கழகத் தேரை இழுத்தவர்கள்!

தெய்வத்திரு.உலகநாதன் அய்யா

சு.பெ.பாபாராசு--மு.சேதுராமன்--
இரா.அசோக்ராஜ்--மு.அர்ச்சுணன்--
த.எழில்மாறன்-- முரளி--
புலவர் ஆறுமுகம்-- இரா.பொற்கைப் பாண்டியன் மு.முருகேசன்
வீதிவிடங்கன்-
வீரபாண்டியத் தென்னவன்-மு.வீரமணி-- குறளடியான் முனியப்பன்-- ஜீவகன்-- கண்ணப்பன்-- ஆண்டவர்-- மார்சல் முருகன்-- வே.த.நவமணியன் -- சீனிவாசன்--மற்றும் நண்பர்கள்-- செந்தமிழ்க் கல்லூரி மாணவ மாணவிகள்

பாரதியார் நூற்றாண்டு விழா பாண்டிச்சேரி!

11.12.1882 -- 11.12.1982

பாண்டி அரசின் முயற்சியால் பாரதியார்
நூற்றாண்டு கொண்டாட்டம் ஆயிரம் பாவலர்கள்
தோன்றியே மேடையில்  பாக்களால் அஞ்சலி
பாடவைத்தார் நல்லரசு தான்.

15.08.1984 நற்கூடல் இலக்கியக் கழகம்,!

அந்தத்  தொடர்பால் தமிழ்ச்சங்க மாணவர்கள்
வந்தனர்! வீட்டிலே கூடினோம்! நற்கூடல்
என்றே இலக்கியத் தொண்டுக் கழகத்தை
அன்றே பெயர்வைத்தோம்! நாட்டு விடுதலைநாள்
அன்று தமிழ்ச்சங்கந் தன்னில் தொடங்கினோம்!
ஒன்பதாண்டுகள் தொண்டுக்கு வாய்ப்பு.

பட்டிமன்றம்,பாவரங்கம்,பேச்சரங்கம்,
என்றேதான்
கொட்டி முழக்கினோம்! நாட்டியப் போட்டிகள்
வெற்றியுடன் அங்கே நடத்தினோம்! வாழ்த்தினர்!
முத்தான நாள்கள் அவை.

செந்தமிழ்ச் சங்கச் செயலரும், தாளாளர்
அன்பு தனுக்கோடி பாண்டியன் அய்யாவும்
பண்பாளர் ஆசிரியர்கள் ஊழியர்கள் என்றேதான்
தந்தனர் ஆதரவு தான்.

பென்னரின் ஊழியர்கள், பாரத வங்கியின்
அன்பர்கள் மற்றும் தொழிலதிபர் என்றேதான்
எண்ணற்றோர்  ஆதரவில் நன்றாய் நடத்தினோம்!
இன்று நினைத்தால் சிலிர்ப்பு.

கல்லூரி மாணவ மாணவியர்க்கு ஆண்டுதோறும்
கட்டுரை, பேச்சு, கவிதையில் போட்டிகள்
வைத்தே சுழற்கே டயங்கள் வழங்கினோம்!
எத்தனை நண்பரின் நூல்கள் வெளியிட்டோம் !
வெற்றிக்கு ஊக்கம் அது.

இன்றும் அந்தக் கழகத்தை நண்பர்கள்
ஆர்வமுடன்
அங்கே நடத்துகின்றார் மாமதுரை  ஊரில்தான்!
இந்தப் பிறவியில் நான்பெற்ற பேறென்பேன்!
எண்ணற்ற நண்பர்கள் நட்பு.

அமுதவட்டம்!
(கலிங்கத்துப் பரணி)

முழுநிலவை ஒட்டிவரும் ஞாயிறு நாளில்
குழுவாகச் செல்வோம்! உறுப்பினர்கள் வீட்டில்
ஒருநிகழ்ச்சி தன்னை நடத்துவோம்! வீட்டார்
விருந்தோம்பல்  தன்னை மகிழ்வுடன் ஏற்போம்!
பரணியில் காணும்சொல் இஃது.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home