பென்னர் நண்பர் இலக்கிய குடும்ப நண்பர் முருகேசனுக்கு வாழ்த்து!
மதுரை பென்னர் நிறுவனத்தில் அலைகள் இதழ்!
நானும் சிவாவும் அலைகள் இதழ்தொடங்கி
ஆனமட்டும் நண்பர்கள் பங்கெடுக்கக் கொண்டுவந்தோம்!
ஆதரவைக் கண்டே வியந்தோம்! முருகேசன்
தேடிவந்து தந்தார் கவி.
பென்னர் தொடர்பு பெருகியது! நண்பர்கள்
வந்தனர் ஆதரவு தந்தனர்! மாற்றங்கள்
கண்டோம் துறைகளால் சேர்ந்தோம் நண்பரானோம்!
சிந்தனை ஒன்றியது செப்பு.
1984 நற்கூடல் இலக்கியக் கழகம்
கூடல் கடலுக்குள் வந்தார் முருகேசன்!
ஆகாகா! ஒன்பதாண்டு ஈருருளி மீதுதான்
சுற்றினோம்! எல்லா இலக்கிய நாயகரைச்
சந்தித்தோம்! பாவரங்கம் பட்டிமன்றம் பேச்சரங்கம்
என்றே நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தேதான்
சங்க வளாகத்தில் கொண்டாடிக் காட்டினோம்!
பென்னரின் பேரலை கொந்தளித்த நேரத்தில்
நண்பர் வெளியேறி நற்றமிழ் ஆசானாய்
அங்கேதான் பள்ளியில் சேர்ந்தே முன்னேறி
தன்னாற்றல் காண்பித்தார் வென்று.
முருகேசன் நட்பிலே இன்றும் திளைக்கும்
அருமையான வாய்ப்பில் திளைக்கின்றேன் நாளும்!
பெருமை பெருமிதம் உள்ளது வாழ்வில்!
இரட்டைப் புலவர்தான் வாழ்த்து.
பென்னர் தொடக்கம்! இலக்கியக் கூட்டங்கள்
பின்னர் தொடர மதுரையின் வீதிகளில்
எண்ணற்ற சுற்றுகள் இன்று நினைத்தாலும்
இன்பந்தான் எங்களது நட்பு.
என்ன இருந்தாலும் இன்றும் விவசாயம்
தன்னைக் கருத்தாய்க் கவனிக்கும் நல்லுழைப்பில்
மண்ணின் மகனாய் நிமிர்ந்தேதான் நிற்கின்றார்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
🙏கண்ணில் நீர்ப்பெருக்கு கட்டுப் படுத்த வார்த்தையைத் தேடுகிறேன்..வாழிய நமது நட்பும் உறவும்..🧚♀🧚♀🧚♀🙏
முருகு
மதுரை பென்னர் நிறுவனத்தில் அலைகள் இதழ்!
நானும் சிவாவும் அலைகள் இதழ்தொடங்கி
ஆனமட்டும் நண்பர்கள் பங்கெடுக்கக் கொண்டுவந்தோம்!
ஆதரவைக் கண்டே வியந்தோம்! முருகேசன்
தேடிவந்து தந்தார் கவி.
பென்னர் தொடர்பு பெருகியது! நண்பர்கள்
வந்தனர் ஆதரவு தந்தனர்! மாற்றங்கள்
கண்டோம் துறைகளால் சேர்ந்தோம் நண்பரானோம்!
சிந்தனை ஒன்றியது செப்பு.
1984 நற்கூடல் இலக்கியக் கழகம்
கூடல் கடலுக்குள் வந்தார் முருகேசன்!
ஆகாகா! ஒன்பதாண்டு ஈருருளி மீதுதான்
சுற்றினோம்! எல்லா இலக்கிய நாயகரைச்
சந்தித்தோம்! பாவரங்கம் பட்டிமன்றம் பேச்சரங்கம்
என்றே நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தேதான்
சங்க வளாகத்தில் கொண்டாடிக் காட்டினோம்!
பென்னரின் பேரலை கொந்தளித்த நேரத்தில்
நண்பர் வெளியேறி நற்றமிழ் ஆசானாய்
அங்கேதான் பள்ளியில் சேர்ந்தே முன்னேறி
தன்னாற்றல் காண்பித்தார் வென்று.
முருகேசன் நட்பிலே இன்றும் திளைக்கும்
அருமையான வாய்ப்பில் திளைக்கின்றேன் நாளும்!
பெருமை பெருமிதம் உள்ளது வாழ்வில்!
இரட்டைப் புலவர்தான் வாழ்த்து.
பென்னர் தொடக்கம்! இலக்கியக் கூட்டங்கள்
பின்னர் தொடர மதுரையின் வீதிகளில்
எண்ணற்ற சுற்றுகள் இன்று நினைத்தாலும்
இன்பந்தான் எங்களது நட்பு.
என்ன இருந்தாலும் இன்றும் விவசாயம்
தன்னைக் கருத்தாய்க் கவனிக்கும் நல்லுழைப்பில்
மண்ணின் மகனாய் நிமிர்ந்தேதான் நிற்கின்றார்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
🙏கண்ணில் நீர்ப்பெருக்கு கட்டுப் படுத்த வார்த்தையைத் தேடுகிறேன்..வாழிய நமது நட்பும் உறவும்..🧚♀🧚♀🧚♀🙏
முருகு
0 Comments:
Post a Comment
<< Home