Sunday, March 08, 2020

வள்ளுவர் குரல் குடும்பத்தின்  ஆர்வலர் வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்து!

எந்த நிகழ்வெனினும் முன்னணியில் நின்றிருப்பார்!
தன்னால் இயன்ற அனைத்துப் பொறுப்பையும்
முன்வந்தே ஏற்பார்! சிறிதளவும் கோபமின்றி
தன்னார்வத் தொண்டராக சேவைகள் செய்திருப்பார்!
வண்டமிழ் வள்ளுவர்க் கூட்டுக் குடும்பத்தின்
தன்னலமற்ற வெங்கட்டோ சுங்கவரி ஊழியர்!
அன்பும் அரவணைப்பும் கொண்டவர்! பண்பாளர்!
தன்னால் இயன்ற உதவிகளைச் செய்பவர்!
நண்பரோ ஆரவார மில்லாத அன்பராவார்!
அன்புக் குடும்பத்தார் எல்லோரும் முப்பாலின்
வண்டமிழ்த் தேன்குறள் ஆர்வலர்கள்!
மெய்ப்பொருள்
தன்வழித் தேடலில் வாழ்பவர் வெங்கடேஷ்!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home