Sunday, March 08, 2020

மதிப்பிற்குரிய விசாகை
அய்யா  துரைசாமி திருவாசகம்
அம்மா நிலமங்கை அவர்களின் ஆசிகள் வாழவைக்கும்!

தந்தை பெரியாரைப் போற்றிப் புகழ்ந்தாலும்
தன்பெயரில் அய்யா  திருவா சகந்தன்னை
என்றும் இணைத்திருக்கும்  அன்புப்
பெரியவர்
செந்தமிழ் அய்யனின் வள்ளுவத்தில் ஒன்றியவர்!
நம்குழுவின் மூத்த குறள்நெறி
யாளர்தான்!
ஆந்திர மாநிலத்தில் வாழும் இணையரின்
ஆசிகள் வாழவைக்கும் இங்கு.

மதுரை பாபாராஜ்

அன்பரே
இன்றைய தமிழகமும் அரசியலும் யாம் கண்டிராத ஒருவகையான அதிசயம். அங்கு பல ஆண்டுகள் பரபரப்பாக வாழ்ந்து  பின் இன்று அமைதியாக ஒரு மூலையில் வள்ளுவனைப் போற்றிக்கொண்டு வாழ்பவர்களை முன்னிலைப் படுத்தி மகிழ்தமைக்கு மிக்க நன்றி. வாழ்க மதுரையாரின் கலைக்குடும்பம்.
மிக்க நன்றி. 🙏
வாழ்க வள்ளுவம்.

துரைசாமி திருவாசகம்,விசாகை

0 Comments:

Post a Comment

<< Home