Saturday, March 07, 2020

ஆன்மிகச் செம்மல் குறள்நெறியாளர்
பழனிமுத்து அவர்களுக்கு வாழ்த்து!

பாரத் மிகுமின் நிறுவன ஊழியர்!
வேரோடும் ஆன்மிகமும் தேன்குறளும் வாழ்வாகும்!
பார்போற்றும் கம்பனில்  ஆழ்வாரின் பாசுரத்தில்
ஆர்வமிகு வைணவத்தில் நாளும் திளைப்பவர்!
ஈர்க்கும் இலங்கை ஜெயராஜ் பொருள்கூற
பாமரர் போற்ற பரிமே லழகரின்
வான்புகழ் வள்ளுவத்தை வாசிக்கும் பேறுபெற்றார்!
நற்றமிழ்த் தேன்குறளை ஆயும் தனித்திறமை
கற்றறிந்த ஆற்றல் மிளிர்கிறது! வாழ்க!
கற்கண்டுக் கம்பர்,சிலம்பு,குறளென்றே
எத்தகையக் கூற்றிலும் பங்கெடுக்கும் ஆற்றலில்
முத்தாய் பழனிமுத்து இங்கே திகழ்கின்றார்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home