Monday, March 09, 2020

கவிஞர் பொற்கைக்கு வாழ்த்து!

கற்கண்டுச் சொல்லெடுத்துச் சந்தக் கவிபாடும்
பொற்கையின் ஆற்றலோ உள்ளங்கை நெல்லியாகும்!
பொற்கை இருக்குமிடம்  எல்லாம் தமிழ்மணக்கும்!
நற்றமிழ்ப் பாவலரை வாழ்த்து.

கவியரங்கம் பேச்சரங்கம் வாழ்த்தரங்கம்
எல்லாம்
கவித்துவம் உள்ளாட மக்கள் ரசிக்க
அளித்தோம் கவிமழை கோயில் விழாவில்
சிரிப்போம இன்று நினைத்து.

நிலையக் கலைஞர்கள் போல குழுதான்!
சளைக்காமல் கோயிலுக்குக் கோயில் விழாவில்
கலந்தேதான் பாடுவோம் ஜெய்ஹிந்பு ரத்தில்!
களம்தந்த மாமதுரை ஊர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home