Monday, March 09, 2020

முனைவர் சங்கர சரவணன்

திருக்குறள் ஆர்வலர்
முனைவர் சங்கரசரவணன் அவர்களுக்கு வாழ்த்து!

கால்நடையின் நோய்க்கு மருத்துவர்! அத்துறை
ஆய்வில் முனைவராகப் பட்டத்தை வென்றவர்!
தாய்மொழிச் செந்தமிழைப்  போற்றித்தான் வாழ்பவர்!
போட்டிகளின் தேர்வுக் கென்றே பலநூல்கள்
ஆக்கிக் கொடுத்துள்ளார் சங்கரர் மாணவர்க்கு!
வார விகடனுடன் சேர்ந்தே இளைஞர்கள்
வாழ்வுயரப் பாடுபடும் வல்லவர்! பண்பாளர்!
ஆர்வமுள்ளோர் சேர்ந்து குடிமைப் பணித்தேர்வில்
தேற பயிற்சிதரும் ஆசான் சரவணன்!
நாட்டுக் குறளின் நிகழ்ச்சி நெறியாளர்!
ஆற்றல் பலகொண்டு தேன்குறளை ஆர்வமுடன்
போற்றுகின்ற இல்லறத்தில் நல்லறத்தைக் காண்பவர்!
ஏற்றமுடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home