Monday, March 09, 2020

கவிஞர் சிற்பி அய்யா அவர்களுக்கு வாழ்த்து!

பேரா சிரியர்! அற்புதப் பாவலர்!
தேர்ந்த மொழிபெயர்ப் பாளர்! இலக்கியம்
சார்ந்த இதழா சிரியர்! இப்படி
வாழ்விலே பன்முக ஆற்றல் மிளிர்கின்ற
சீர்மிகுப் பண்பாளர் சிற்பி! மிகையில்லை!
சாகித்ய பல்கலைக் கூட இணைப்பாளர்!
சிற்பியின் பாக்கள் மலையாளம் இந்திமொழி
கன்னடம் ஆங்கிலம் மற்றும் மராத்தியில்
இங்கே வெளிவந்து வாழ்த்தப் பட்டன!
நன்முறையில்  ஆய்வுசெய்யும் மாணவர்க்கு ஆர்வமுடன்
நன்னெறி யாளராய்த் தொண்டுசெய்யும் வல்லவர்!
இன்னும் பொறுப்புகள் பட்டியல் ஏராளம்!
எங்கள் குறள்குடும்பம் சார்ந்தவர் என்பதே
எங்களுக்கு என்றும் பெருமை! பெருமிதம்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home