Monday, April 06, 2020

ஒவ்வொருவருக்கும் திறமை உண்டு!

தமிழ்ப்பாட்டியின் பாட்டுக்குத் தமிப்பேரனின் பாட்டு!

அவ்வையின் பாட்டு:

வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது."

கரையான்  திறமையைப் புற்றமைத்துக் காட்டும்!
சிலந்தி வலைபின்னித் தன்திறமை காட்டும்!
பறக்கின்ற சின்னதூக்க ணாங்குருவி கூட்டைத்
திறமையாய்க் கட்டி வியக்கத்தான்  வைக்கும்!
பறவைக்கும் பூச்சி கரையா னுக்கும்
திறமைகள் உண்டாம்! அமைப்பில் மனிதன்
பிறப்பிலே ஒவ்வொருவர்க் குள்ளும் திறமை
அடங்கி இருக்கிறது! நான்மட்டும் இங்கே
திறமை படைத்தவன் என்ற செருக்கைப்
புறந்தள்ளி மாந்தர் திறமையைப் போற்று!
சிறப்பான அவ்வையார் பாட்டின் கருத்தே
நடைமுறை வாழ்க்கையாம் செப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home